சத்தி சாரணை / வெள்ளைச் சாறு வேளை தாவரவியல் பெயர் : Trianthema decandra L. குடும்பம் : Aizoaceae வளரிடம் : சமவெளிகள், கடற்கரைகள், ஆற்றங்கரையோரங்கள், தரிசு நிலங்களில் வளர்வன. கடற்கரையோரங்களில் வளரும் சிற்றினங்கள் குறிப்பிடத்தக்க வகையில் சதைப்பற்றுடன் இருக்கும். தமிழகத்தின் உட்பகுதியில் மணற்பாங்கான இடங்களில் வளர்கின்றது. வளரியல்பு : நிலம் படிந்த சிறு செடி. இலைகள் நீண்டு உருண்ட முட்டை வடிவானவை. இலைக்காம்பு அகன்றது. மலர்கள் குறுக்களவு 4.5 மி.மி அம்பல் வடிவில் ஒரு கொத்தில் உள்ளன. புல்லி குழல் தலைகீழ் கூம்பு வடிவானது. புல்லிகள் வெளிப்புறம் பச்சை. உட்புறம் இளஞ்சிவப்பு மகரந்ததாள்கள் பத்து, சமமற்றவை, இளஞ்சிவப்பு சூல்பை அறைகள் இரண்டு. மருத்துவப் பயன்கள:
வீக்கம், கட்டி ஆகியவற்றைக் கரைக்கும். பசி மிகுக்கும்.
இலைச்சாற்றைத் தாய்ப்பாலுடன் கலந்து கண்ணுக்கு மை போல் தீட்டிவரக் கண்நோய்
அனைத்தும் தீரும். இலைச்சாறைப் பாலில் கலந்து சாப்பிட்டுவர வீக்கம் வயிற்றுவலி
தீரும். முற்றிய வேர் சூரணம் அரைக்கிராம் அளவாகச் சாப்பிட்டு வர யானைக்கால்
வீக்கம், பீனிசம், வாதநோய் குணமாகும். |